நமக்கு வேண்டப்பட்டவர்கள் இறந்து விட்டது போல் கனவில் கண்டால்
ஆபத்தில் இருந்து தப்பித்து விடுவீர்கள் என்பது பொருள்.ஆயுள் விருத்தி ஏற்படும்.நமக்கு வேண்டப்பட்டவர்கள், நமக்கு தெரிஞ்சவங்க யாரா இருந்தாலும் சரி, உயிரோட இருக்கற ஒருத்தர் இறந்துட்டதா நம்ம கனவுல பார்த்தோம்னா அவங்களுக்கு ஆயுள் விருத்தி ஏற்படும்.
இறந்தவர் கனவில் அழுதால்
ஏற்கனவே இருந்த முன்னோர்கள் கனவில் வந்து அழுதார்கள் என்றால் பிரச்சனை. அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி முறைகளை செய்ய வேண்டும். அதாவது நம்ம கனவுல வந்து நம்ம தாய் தந்தையரே இல்ல. நம்ம தாத்தா பாட்டி இல்ல மூதாதையர்களும் கனவுல வந்து அழவே கூடாதுங்க. அப்படி அழுவுற மாதிரி கனவுல வந்துச்சுன்னா நமக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட போகுது.
அவங்களுக்கு செய்ய வேண்டிய திதி காரியங்களை நாம முறையாக செய்யாமல் இருந்தால் கூட அந்த மாதிரி ஒரு கனவு வரலாம். கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வருவது நல்லது. இறந்து போன தாய் மற்றும் தந்தை கனவில் வந்தால் ஆபத்து எச்சரிக்கை வந்துள்ளதாக பொருள். இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நன்மையே.
அதாவது இயற்கையாக வயசாகி, ரொம்ப நல்ல ஆயுளுடன் நல்ல குடும்பத்தோட இருந்து இறந்தவர் வந்தாங்கன்னா நமக்கு பிரச்சனை கிடையாது. தாங்களே இறந்து விட்டது போல் கனவில் கண்டால் பயப்பட தேவையில்லை. ஆயுள் விருத்தி ஏற்படும். ஆயுள் அதிகமாகும் என்று பொருள்.
இறந்தவர்கள் திரும்பவும் மரணமாவது போல் கனவில் கண்டால்
அதாவது இறந்து போனவங்க திரும்ப இறந்து இருக்கற மாதிரி. சடலமாகவோ பார்த்தால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையவில்லை என பொருள்.அவர்களுக்கு செய்யவேண்டிய திதி, காரியம் இவைகளை செய்யாமல் இருந்தால் இப்படிப்பட்ட கனவு வரும்.
அப்படி செய்யாம விட்டு இருந்தீங்கனா நீங்க செஞ்ச இறந்துபோன தாய்தந்தை தங்களிடம் கனவில் வந்து ஏதாவது தருவதுபோல், அதாவது நகை பணமோ, ஏதாவது ஒரு துணி, ஆடை எதாவது உங்களுக்கு குடுக்குறமாதிரி கனவுல பாத்திங்கன்னா நன்மையே.சுப காரியம் நடக்கும். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரி தொல்லை நீங்கும்.
இறந்தவர் கனவில் வந்து பேசினால்
இறந்தவர் நம்முடன் பேசுற மாதிரி பாத்திங்கனா ரொம்ப நல்லது. பெயரும் புகழும் ஏற்படும்.
இறந்தவர் நம் இல்லத்தில் உறங்குவது போல் கனவில் கண்டால்
நம் முன்னோர்கள் தாத்தா பாட்டி. தாய் தந்தையோ இறந்து போனவர்கள். நம்ம வீட்ல உறங்கி இருக்கற மாதிரி கனவில் பாத்தீங்கன்னா ஆபத்துல இருந்து தப்பிவிட்டீர்கள் என பொருள். பெரிய கண்டத்தில் இருந்து அவங்க உங்கள காப்பாத்துராங்கன்னு அர்த்தம். அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருப்பதாக பொருள்.
இறந்தவர்கள் உங்களில் உங்களை கனவில் பெயர் சொல்லி அழைப்பது போல் கனவில் கண்டால்
விரைவில் உங்களுக்கு சுபச்செய்தி வரும் என பொருள். இறந்தவர் உங்களுக்கு ஆசி வழங்குவது போல் கனவில் கண்டால் நன்மையே. அவர்களின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது என பொருள்.
இறந்தவர்கள் திதி அம்மாவாசை நாட்களில் கனவில் வருவது இயல்பே. அதாவது ஒரு ரெண்டு நாள், ரெண்டு நாள் அமாவாசைக்கு ஒரு ரெண்டு நாள் இருக்கு.
அதுக்கு முன்னாடி அவங்க கனவுல வந்தாங்கன்னா அது உங்களுக்கு பாதகம் கிடையாது. அதே மாதிரி திதி நாட்கள்ல உங்களுக்கு வருஷத்துக்கு ஒரு முறை திவசம் கொடுக்கிற நாட்கள் அவங்க கனவுல வந்தாங்கன்னு அத உங்களுக்கு நியாபகபடுத்தறாங்க.அத நீங்க செய்யனும்னு அர்த்தம்.
இறந்தவர்கள் தங்களுக்கு பூ கொடுப்பது போல் கனவில் கண்டால் புதிதாக உறவு முறை கிடைக்க போவதாக பொருள். செருப்பு கொடுத்தால் அதாவது இறந்தவர்கள் வந்து உங்களுக்கு செருப்பு கொடுக்குற மாதிரி கனவுல பாத்திங்கன்னா நீங்க ஏதாவது மனசுல ஒரு பயணத்துக்கு ஒரு ஊருக்கு கிளம்பனும். ஏதாவது ஒரு பயணத்த பத்தி நினைச்சிட்டு இருந்தேன். அந்த பயணம் உங்களுக்கு வெற்றி கொடுக்கும்னு அர்த்தம்.
இறந்தவர்கள் உங்களுக்கு சாப்பாடு கொடுப்பது போல் கனவில் வந்தால்
தற்சமயம் உங்களுக்கு ஒரு இக்கட்டான ஒரு சூழ்நிலை வரப்போகுது. அந்த சூழ்நிலைல இருந்து நீங்க காப்பாத்தி வெளியில வர்ற அளவுக்கு உங்களுக்கு உதவுறாங்க. அதுக்குதான் சாப்பிடற மாதிரி வருதுன்னு அர்த்தம்.
இறந்து போனவர்களை தூக்கி செல்வது போல் கனவில் கண்டால்
அதாவது இறந்துட்டாங்க. அவங்களை நாலு பேர் சேர்ந்து தூக்கிட்டு போற மாதிரி கனவுல பாத்திங்கன்னா நன்மையே. இறந்தவர்கள் தங்கள் வீட்டில் சாப்பிடுவது போல் கனவில் கண்டால் நற்செய்தி கிடைக்கும். நற்பெயரும் புகழும் ஏற்படும். இறந்தவர்கள் உங்க வீட்ல வந்து சாப்பிடுற மாதிரி பார்த்தீங்கன்னா உங்களுக்கு புகழும் நற்பெயரும் ஏற்படும்.
கெட்ட கனவுகள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.