காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Kalaimadu Thurathuvathu Pol Kanavu Vanthal Enna Palan

பொதுவாக ஹிந்து மதத்தில் மாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அப்படிப்பட்ட மாடு உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் என்பதைப் பார்ப்போம்.கனவில் பசுவினை பார்ப்பது போன்று கனவு கண்டால் கனவு காண்பவருக்கு நீண்ட ஆயுள் பலன் உண்டு என்பது பொருள்.உங்களோட வாழ்க்கையில ரொம்ப நாள் நீங்க எந்த ஒரு நோய் நொடியும் இல்லாம நல்லா இருக்க போறீங்க அப்படிங்கறத குறிக்கிறது ஆக தான் இந்த கனவு உங்களுக்கு வரும்.

இதுவே கனவுல காளை மாடு வருது அப்படினா அது நல்லது கிடையாது.காளை மாடு ங்கறது நம்மளோட வாழ்க்கையில வரப்போற துன்பத்தை உணர்த்துவதற்காக கனவுல வரும்.இதனால நீங்க ஏதும் பயப்பட வேண்டாம். மன தைரியத்தோடு செயல்படுங்க.எல்லா காரியமும் நல்லபடியா நடக்கும்.

பசு மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்

காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காளைகள் கனவில் வருவது நல்லதல்ல.இதனால் துன்பங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.காளை நம்மை துரத்துவது போல் கனவு கண்டால் மரணபயம் உண்டாகும்.

பசு மாடு முட்டினால் என்ன பலன்

காளை நம்மை முட்டுவது போல் கனவு கண்டால் விபத்துக்கள் ஏற்படும்.மேலும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம்.காளை நம்மை மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் படிப்படியாகக் குறைந்து மகிழ்ச்சிகள் உண்டாகும் என்று அர்த்தம்.

காளைகள் சீறுவது போல் கனவு காண்பது பிறரின் மேல் நமக்கு இருந்த அதிகாரங்கள் குறையும் என்று அர்த்தம்.இரு காளைகள் கனவில் வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும் என்றும் பொருள்.

காளை நம்மை துரத்துவது போல் கனவு காண்பது வீண் பிரச்சனைகள் வந்து போகும் என்பதைக் குறிக்கிறது.மேலும் இது போன்ற கனவு வந்தால் அருகில் உள்ள கோயிலில் தீபம் தீபம் ஏற்றி வந்தால் நம் பிரச்சனைகள் படிப்படியாகக் குறையலாம்.

கனவுல நீங்க பசுவுக்கு உணவளிப்பது போல கனவு வருதுன்னா இது ரொம்ப நல்ல கனவு. உங்களோட வாழ்க்கையில நல்ல ஏற்றத்தை கொடுக்கப்போகுதுன்னு அர்த்தம்.எதிர்பாராத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.ப்ரோமோஷன் கிடைக்கும்.இல்ல வெளியூர் போறமாதிரி எதாவது சூழ்நிலைகள் அமையும்.நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்க போகுது உங்களோட வாழ்க்கைல அப்படிங்கறதை தான் இது குறிக்கிறது.

கனவில் பசு வந்து அதோட கன்று கூட இருப்பது போல கனவு வருதுன்னா உங்களோட ஆழ் மனதில் நிறைவேறாத ஆசைகள் நிறைய இருந்திருக்கும். அத எல்லாம் நிறைவேற்றறதுக்கான வாய்ப்பு உங்களுக்கு வரப்போகுதுன்னு அர்த்தம்.

கண்டிப்பா உங்களோட நிறைவேறாத ஆசைகள் எல்லாமே நீங்க நிறைவேத்துப்பீங்க. அது குடிக்கிறதுக்காக தான் இந்த கனவு வருது.மாடு இறந்து போவதை போல கனவு வருதுன்னா வீட்ல பண பற்றாக்குறை வரப்போகுது அப்படிங்கறத உணர்த்துது.

இதுவே கனவில் பசு வந்து பிரசவிப்பது போல கனவு வருதுன்னா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும்.வீட்ல செல்வ வளம் பெருக போது அப்படிங்கறதை இது குறிக்கிறது.இது ரொம்பவே நல்ல கனவு.

பசுமாடு கனவில் முட்டுவதைப் போல கனவு வந்தா கனவு காண்பவருக்கு அவர்களின் பிடிக்காதவர்களால் வரவிருக்கும் துன்பத்தை உணர்த்துவதாகும்.நாம நல்லா இருக்கக் கூடாதுன்னு யாராவது நினைப்பாங்க.நம்மள சுத்தி இருக்கவங்க அவர்களால் வரக்கூடிய ஆபத்தை எச்சரிக்கறதுக்காக தான் இந்த கனவு வருது.

இதுவே காளை மாடு நம்மள மாதிரி கனவு வருது அப்டின்னா அது நல்லதில்ல. வீட்ல வந்து விபத்து இல்லன்னா மருத்துவ செலவு வந்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கு

கனவில் பசுமாடு விரட்டுவது போல கனவு வந்தா

இது கெட்ட சகுனம் தான். நீங்க எந்த செயல் செய்வீங்க  அது தோல்வியில் முடிவடையப்போகிறது அப்படிங்கறத உணர்த்துறதுக்காக தான் இந்த கனவு வரும்.கொஞ்சம் நீங்க எச்சரிக்கையோடு செயல்படனும். 

கனவில் பசு உங்களுடன் பேசுவது போல கனவு வருதுன்னா அது பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே கவனத்தில் வச்சுக்குங்க.ஏன்னா அது கனவு காண்பவருக்கு சொல்லப்போகும் விஷயமாக இருக்கும்.அது என்ன சொல்லுதோ அது நீங்க கேட்டு நடக்கறது ரொம்பவே நல்லது.

காளை மாட்டின் காலில் மிதிபடுவது போல கனவு வந்தா

இது கனவு காண்பவருக்கு வாழ்க்கையில இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாமே கொஞ்ச கொஞ்சமா சரியாகப்போகுது அப்டிங்கறத உணர்த்துறதுக்காக தான் இந்த கனவு வருது.

கனவில் பசுவானது மஞ்சள் நிறத்தில் இருந்தால் கனவு காண்பவருக்கு வரவிருக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.உங்களோட வாழ்க்கையில விலைமதிக்க முடியாத பொருளை அடைய போறீங்க அப்படிங்கறத உணர்த்துறதுக்காக தான் இந்த கனவு வரும்.

கருப்பு பசு மாடு கனவில் வந்தால்

அது நல்லதல்ல. கனவு கண்டவருக்கு வரக்கூடிய ஆபத்தை உணர்த்துவதாகும்.அதனால உங்கள சுத்தி இருக்க உறவினர், நண்பர்கள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.அவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்த்துறதுக்காக தான் இந்த கனவு வரும். 

வெள்ளை நிற பசுவை கனவில் கண்டால்

இது ஒரு நல்ல கனவு.உங்களோட வாழ்க்கையில் இருக்க எல்லா பிரச்சனையும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ போகிறீர்கள் என்பதை இது உணர்த்துகிறது.

Leave a Comment