கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிடலாமா | Karungali Malai Aninthu Asaivam Sapidalama

கருங்காலி மாலை அணிந்தால் அசைவம் சாப்பிடலாமா? நிறைய பேருக்கு இந்த கருங்காலி அப்படிங்கிறத விட தன்மை  நிறைய பேருக்கு தெரியுறதுல இந்த கருங்காலி அப்படிங்கறது ஒரு ஆகர்ஷன தன்மை கொண்ட ஒரு அற்புதமான பொருள்.அதாவது நேர்மறையான விஷயங்களை உருவாக்க கூடியது. 

எதிர் மறையான விஷயங்களை எடுக்க கூடிய ஒரு அற்புத பொருள் தான் இந்த கருங்காலி.நம்மல சுத்தி இருக்க கூடிய நெகட்டிவ் எடுத்துட்டு பாசிட்டிவ் தரக் கூடியது தான் இந்த கருங்காலி.

இந்த கருங்காலி மாலை அணிவதால் செவ்வாய் தன்மை பலப்படும். அது எல்லோருக்கும் தெரியும். அதே போல நாம் நினைத்த விஷயங்களில் வரக்கூடிய தடைகள், குழப்பங்கள் விலகும்.அற்புதமான பொருள் தான் இந்த கருங்காலி.

கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிடலாமா

நிறைய பேருக்கு அந்த கருங்காலி அணியும்போது அசைவம் சாப்பிடலாமா? அசைவம் சாப்பிடுவது தவறு இல்லை அப்படின்னு நிறைய பேர் இருப்பாங்க. பொதுவாவே அசைவம் சாப்பிடுவதை தவறு தான்.

கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிட கூடாதுன்னு எதுலயும் குறிப்பிடப்படவில்லை. ஆனா மாலை என்று ஒன்னு அணியும் போது அந்த மாலைக்குன்னு ஒரு மகத்துவம் உண்டு. ஒரு சக்தி உண்டு. அதனால அந்த மாலை அணிந்திருக்கும் போது அசைவம் சாப்பிடாமல் இருந்தால் அந்த மாலைக்கான மகத்துவத்தை நாம் பெறலாம்.

அசைவம் சாப்பிடும் போது மாலை அணியாமல் இருந்தா அந்த மாலைக்கு நாம ஒரு மரியாத கொடுக்கிறோம் அப்படின்னு அர்த்தம். அதே போல மாலை அணிந்து இருக்கும் போது அந்த மாலையை அணிவதற்கு சில வகுக்கப்பட்ட நியதிகள் உண்டு. என்னன்னா positive இடங்கள், நல்ல காரியங்கள், பூஜைகள் செய்யும்போது சுப காரியங்கள் செய்யும்போதுதான் நாம் மாலை அணிந்திருக்க வேண்டும்.

இறந்தவர்கள் வீட்டிற்கு குழந்தை பிறந்த வீட்டுக்கு போறதுக்குள்ள அந்த மாலையை அணிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.அப்படி அணிந்தாலும் தவறு இல்லை. ஆனால் நல்ல விஷயங்களை செய்யும் போது மாலை அணிந்திருந்த அந்த அந்த நன்மை இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

ஒரு தர்மமோ, ஒரு புண்ணியமோ பண்றோம். ஒரு நல்லதை பண்றோம். அப்படின்னா மாலை அணிந்து கொண்டே பண்ணா அந்த நன்மைகள் நமக்கு சிறப்பா இருக்கும். அதே மாதிரி negative users ஏதாவது நம்மளுக்கு வரும்போது தாக்கத்துல இருந்து நீக்குவது தான் இந்த கருங்காலி. அதனால கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிடாம இருந்தா நல்லது.

கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிடலாமா

அசைவம் சாப்பிட வேண்டி இருக்கு. வேற வழியில்லை. அப்படின்னா இந்த மாலைக்குள்ள மரியாதை நாம் குடுக்கணும். அதனால அந்த மாலையை கழற்றி பூஜை ரூம்ல வச்சிட்டு அப்புறம் சாப்டுட்டு அதுக்கப்புறம் குளிச்சிட்டு இந்த மாலையை நாம் அணிந்து கொள்வது நல்லது.

அதனால மாலை அணிந்திருக்கும் போது அந்த மாலைகின்ற ஒரு சக்தி இருக்கு. மகத்துவம் இருக்கு. அதை நாம் கருத்தில் கொண்டு அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்ல கண்டிப்பா சாப்பிட வேண்டி இருந்தால் மாலை கழற்றி வைப்பது தான் சிறந்த வழி.

மாலை அணிந்து தூங்கும்போதும் படுக்கறதுக்கு முன்னாடி கழற்றி வைக்கனும். குளிக்கும்போது அணியக் கூடாது என்று நியதிகள் இருக்கு. அதாவது மலஜலம் கழிக்கும் போதும், குளிக்கும்போதும், சாப்பிடும்போதும், தூங்கும்போதும் மாலை அணிந்து இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க.

நம்ம சபரிமலைக்கோ, முருகனுக்கோ, அம்பாளுக்கும் மாலை போட்டிருந்தா அது நாற்பத்தெட்டு போட்டுட்டுதான் நாற்பத்தெட்டு நாள் மாலை கழுத்துல இருக்கும். மாலை போடும்போது அந்த மாலைக்கான மகத்துவத்தை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் இதில் நான் சொல்ல வர்ற விசயம்.

1 thought on “கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிடலாமா | Karungali Malai Aninthu Asaivam Sapidalama”

Leave a Comment