தம்பி கனவில் வந்தால் என்ன பலன் | sagotharan kanavil vanthal enna palan

தம்பி கனவில் வந்தால் என்ன பலன்

இரவு தூங்கும்போது கனவு வர்றது ஒரு இயல்பான ஒன்னுதாங்க.இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்குங்க.அதாவது எல்லோருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வர்றது இல்ல.சில பேருக்கு மனிதர்கள் கனவுல வருவாங்க.

சில பேருக்கு விலங்குகள் கனவுல வரும்.இப்படி எந்த மாதிரி கனவுகள் வந்தாலும் அதற்கான பலன்களை நாம தெரிஞ்சுக்கனும். ஏன்னா நம்மோட முன்னோர்கள் அதிகாலைல கண்ட கனவு பலிக்கும் ன்னு சொல்லுவாங்க.அதனாலேயே கனவுகளுக்கான பலன்கள் பார்க்க செய்யுறாங்க.

இந்த கனவுகள் முழுவதுமே ஞாபகம் இருக்காது.சிலருக்கு மட்டும் தான் ஞாபகம் இருக்கும்.பொதுவா கனவுகள் வருவதே நமக்கு வரக்கூடிய நன்மை தீமைகளை உணர்த்துவதற்காக தானுங்க.

அந்த வகையில அண்ணன் கனவுல வந்தா தம்பி கனவுல வந்தா என்ன மாதிரி பலன்கள் அப்படிங்கறத பத்தி நாம தெரிஞ்சிக்க போறாங்க.உங்க கனவுல உங்களுடைய அண்ணனோ, தம்பியோ கனவுல வந்துருந்தாங்க.அப்படின்னா கமெண்ட்ல தெரியப்படுத்துங்க. தம்பி கனவுல வந்தா என்ன பலன் தெரிஞ்சுப்போம்.

நீங்க எந்த தம்பிய கனவுல பாக்கறீங்களா? அவங்க மீது அக்கறை, அன்பு செலுத்த வேணும் அப்படிங்கறத உணர்த்தக்கூடியது. அதாவது அவங்களுக்காக நீங்க கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.அவங்க உங்ககிட்ட அன்பை எதிர்பாக்குறாங்க.அவங்க உங்ககிட்ட understanding எதிர்பாக்குறாங்க.நம்மள புரிஞ்சிக்கனும். நம்மகிட்ட உக்காந்து இவங்க பேசணும்.இவங்க நம்மகிட்ட கொஞ்சம் ரொம்ப அன்பா இருக்கனும் அப்டின்னு அந்த தம்பி வந்து உங்ககிட்ட எதிர்பாக்குறாங்க அப்படிங்கறத உங்களுக்கு உணர்த்துறதுக்கு தான் இந்த மாதிரியான ஒரு கனவு வருது.

அப்ப அவங்க மனசுல உங்க மேல அதிக பாசம் இருக்குங்க.அந்த பாசத்த நீங்க தான் புரிஞ்சுகிட்டு நீங்களும் அவங்களுக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணனும்ங்க.

அண்ணன் கனவுல வந்தா என்ன பலன்

நீங்க அண்ணன கனவுல கண்டா உங்களுக்கு ஏதும் நிறைவேறாத ஆசைகள் இருந்தா அது நிறைவேறும் அப்படிங்கிற உங்களோட வளர்ச்சியைக் கண்டு மத்தவங்க பொறாமை அடையறாங்க அப்படிங்கறதையும் உணர்த்துதுங்க.அது மட்டுமில்லாம உங்க மீது அதிக அன்பு உள்ளது போல நடிப்பாங்க.அதுனால நீங்க கொஞ்சம் பழகறவங்க கிட்ட கவனமா இருங்க.உங்க கூட இருக்கறவங்களா இருந்தாலுமே அவங்க எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையவங்க அப்படிங்கறத தெரிஞ்சுக்கோங்க.அதை தெரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் அவங்க கிட்ட பழகறது உங்களுக்கு நல்லதுங்க.இல்லைன்னா அது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியதாக மாறிடுங்க.

இதுவே மூத்த அண்ணன் கனவில வந்தா உங்களுக்கு அதாவது நிறைய வீடுகள்ல பார்த்தீங்கன்னா மூணு பசங்க இருப்பாங்க. அந்த மாதிரி இருக்கும்போது முதல் அண்ணன், இரண்டாவது அண்ணன்னு சொல்வாங்க. மூத்த அண்ணன்.அந்த குடும்பத்துல மொதோ மொதோ அந்த அண்ணன் அப்படிங்கறத தான் இந்த மாதிரி மூத்த அண்ணன் வந்து உங்களுக்கு கனவுல வராங்கன்னா அவங்க ஆதரவா யாருமே இருக்க மாட்டாரா அப்படின்னு ஏங்குறாங்க அப்படிங்கறத உணர்த்துகிறது.

இந்த மாதிரி மூத்த அண்ணன் கனவுல வரும்போது அவரு ஏதாவது ஒரு பிரச்னைல இருக்கலாம்.அல்லது நிறையக் காசு பணம் இருந்தாலோ ஏதோ ஒரு தனிமையை அவரு உணரலாம்.

அந்த தனிமையை போக்குறதுக்கு நமக்குன்னு யாருமே இல்லையே. நம்ம மேல யாரும் அக்கறை காட்ட மாட்டாங்களா? இவ்ளோ காசு, பணம் இருந்து என்ன பண்றது அப்படிங்கிற மாதிரியான feel இருக்கலாம்.அல்லது அவங்க பணத்துக்காக கஷ்டப்பட்டுட்டு இருக்கிறாங்க.வாய்ப்புகள் இல்லாம இருக்காங்க அப்படிங்கிற பட்சத்துல நம்ம முன்னேறுறதுக்கு யாரும் உதவ மாட்டாங்களா? அப்படின்னு மனதார அவங்க ரொம்பவுமே வருத்தப்பட்டுகிட்டு இருக்கலாம்.அந்த மாதிரி இருந்துச்சு.அப்படின்னா உடனே நீங்க அவங்களுக்கு என்ன உதவிகள் செய்ய முடியுமோ நீங்க செய்யறது வேணும் அப்படிங்கறதை தான் இந்த கனவு உங்களுக்கு உணர்த்துதுங்க.

அதே மாதிரி அண்ணனோட பேசிட்டு இருக்கற மாதிரி அண்ணன் கிட்ட எதாவது ஒரு விஷயத்தை பத்தி discussion பண்ணிக்கிட்டு இருக்கீங்க.அந்த மாதிரி கனவு வந்துச்சு.அப்படின்னா யாரு அண்ணனோட பேசிக்கொண்டிருப்பது போல கனவு காண்றீங்களோ அவங்க எந்த பிரச்சனை இல்லாம இருப்பாங்க அப்படிங்கறதை இந்த கனவோட உணர்த்துதுங்க.அதாவது உங்களுக்கு ஏதாவது உடல் ரீதியா பிரச்னைகள் இருந்துச்சுன்னா அந்த பிரச்னைகள் எல்லாமே சரியாகிடுங்க.அது மட்டும் இல்லாம உங்களுக்கு வேற ஏதாவது மனதளவில் வேதனைகள் இருந்தாலுமே அது சரியாயிடும்.

அண்ணன் மனைவி கனவுல வந்தா என்ன பலன்

அண்ணி  அந்த மாதிரி எதுவா இருந்தாலும் சரி. ஆக மொத்தத்துல அண்ணி கனவுல வந்தாங்க. அப்படின்னா யாரு கனவுல வந்தாங்களோ, யார் இந்த கனவு காண்றாங்களோ அவங்களுக்கும் உறவினர்களுக்கும் பிரச்சனை வர போகுது அப்படிங்கறதை உணர்த்துகிறது.அதனால உறவுகள் கிட்ட பேசும்போது கவனமா பேச வேண்டும் அப்படிங்கறத உங்களுக்கு எச்சரிக்கை பண்ணுங்க.

அது மட்டுமில்லாம இப்போ உங்களோட வீட்ல எதாவது ஒரு பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. அப்படின்னா அத பத்தின பேச்சுவார்த்தை கொஞ்சம் நீங்க வந்து கேர்ஃபுல்லா பேசனும், கவனமா பேசனும் அப்படிங்கறத உணர்த்துறதுக்கு தான் இந்த மாதிரியான ஒரு கனவு வர்றதுக்கு காரணங்க.

Leave a Comment