சுனாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Sunami Varuvathu Pol Kanavu Kandal Enna Palan

சுனாமி பற்றிய பதினைந்து வகையான கனவுப்பலன் தொகுப்பை அறியலாம்.முதலில் சுனாமி பற்றிய பொதுவான கனவுப்பலன் சிலவற்றை அறியலாம்.

பொதுவாக சுனாமி பற்றிய கனவைக் கண்டால் எதைக்குறிக்கும் என்றால் உங்கள் வாழ்வில் வரவிருக்கும் மாற்றங்கள் பற்றியும், சில உணர்ச்சிகளை நீங்கள் மனதில் அடக்கி வைத்திருக்க விருப்பதையும், வாழ்வில் தற்போது உள்ள பெரிய பிரச்சனைகள் பற்றியும், தொழிலில் அடையவிருக்கும் வெற்றி பற்றியும், செழிப்பான வாழ்வு வாழவிருப்பதையும், முன்னறிவிக்கும் கனவாக இருக்கும் என்பதை குறிக்கிறது.இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பெரிய சுனாமி அலை உங்களை நோக்கி வருவதைப் பார்ப்பது போல் கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் உடனடியாக வரவிருக்கும் பெரிய வாழ்க்கை மாற்றங்கள் பற்றியும், அதை எப்படி நிர்வகித்து சமாளிப்பது என கவலைப்படவிருப்பதையும் பிறரிடம் இருந்து சுதந்திரமாக தப்பித்து வெளிவந்து விட விருப்பதையும் குறிக்கிறது.

சுனாமியில் இருந்து தப்பித்து விட்டது போல கனவில் கண்டால் உங்கள் முடிவில் வலுவான உறுதியுடன் இருக்க விருப்பதையும், உங்கள் வாழ்வில் என்ன நடந்தாலும், தடைகளைத் தாண்டி உங்கள் எதிர்பார்ப்புகளை அடைய முழுபலத்துடன் ஒவ்வொரு நாளும் போராடி வென்றுவிட விருப்பதையும் குறிக்கிறது.

அழுக்கான அலை நீர் கொண்ட சுனாமியை கனவில் கண்டால், நீங்கள் உங்கள் சில தவறான செயல்களை உங்கள் அன்பிற்குரியவரிடம் இருந்து மறைத்து வைத்திருக்க விருப்பதையும், அதனால் உங்கள் பதட்டம் மற்றும் மன அழுத்தம் உங்கள் அன்றாட வாழ்க்கையை கடினமானதாக மாற்றிவிட விருப்பதையும் குறிக்கிறது.

விலங்குகள் சுனாமியை அறிந்து வெளியே ஓடிவருவதைப் பார்ப்பது போல் கனவில் கண்டால், உங்களை சுற்றி உள்ளவர்களிடம் உங்கள் உணர்வுகளை நீங்கள் அதிகமாக பகிர்ந்து கொள்ள விருப்பதையும், அதனால் உங்கள் செயல் அவர்களை உங்களை விட்டு விலக்கி விடவிருப்பதையும்.எனவே உங்கள் அன்பிற்குரியவர்களிடம் அதிகம் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டாம் எனவும் கனவு அறிவுறுத்துகிறது.

தொலைவில் இருந்து சுனாமியை பார்ப்பது போல் கனவில் கண்டால் உங்களுக்கு வரவிருக்கும் சிக்கல் பற்றியும், அது வருவதை முன்னரே நீங்கள் அறிந்து அதற்காக உங்களை தயார்படுத்தி விடவிருப்பதையும், அந்த பிரச்சனை உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமோ அல்லது சமூக வட்டத்திலோ வரவிருக்கும் பிரச்சனை பற்றி குறிக்கிறது.

சுனாமியில் இருந்து நீங்கள் தப்பித்து ஓடுவது போல கனவில் கண்டால், நீங்கள் சில மனக்கவலைகளை வெளிப்படுத்தி விடாமல் மனதில் மறைத்து வைத்திருக்க விருப்பதையும், உங்கள் மன உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதை நீங்கள் கடினமாக உணரவிருப்பதையும், யாரோ ஒருவரை நீங்கள் நேசிக்கவிருப்பதையும், உங்களுக்கு மிகவும் நம்பிக்கையானவருடன் உங்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் கனவு அறிவுறுத்துகிறது.

சுனாமியில் மூழ்குவது போல் கனவில் கண்டால், நீங்கள் மற்றவர்கள் பார்வையில் நல்ல வாழ்வது போல் தோன்றினாலும், உங்கள் வாழ்வில் முழு திருப்தியில்லாமல் இருக்க விருப்பதையும், ஏதோ ஒன்றைப் பற்றி மனதில் கவலையுடன் இருக்க விருப்பதையும் குறிக்கிறது.

இரவு நேரத்தில் சுனாமி வந்தது போல் கனவில் கண்டால் வலிமை மிகுந்த தருணங்களைக் கடந்து செல்ல விருப்பதையும், சிக்கல் வந்து பின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட விருப்பதையும். உங்களுக்கு முக்கியமான ஒன்றை நீங்கள் பிறருக்காக தியாகம் செய்ய விருப்பதையும், உங்கள் அலைச்சலில் நீங்கள் இறுதியில் வெற்றியும் பெற்றுவிடுவீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.

சுனாமி உங்கள் வீட்டை மூழ்கடித்து விட்டது போல் கனவில் கண்டால் நீங்கள் உங்கள் குடும்பத்தை ஆழமாக மதிக்கவும், நேசிக்கவிருப்பதையும், குடும்பத்தில் சில பிரச்சனைகள் அவர்களுக்கிடையில் சில சண்டைகள் வர விருப்பதையும், அந்த சண்டை உங்கள் குடும்பத்தினரின் அன்பைக் கண்டு பொறாமை கொண்டு வெளி ஆட்களால் வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கி அவர்கள் அழிவினை ஏற்படுத்த முயற்சிக்க விருப்பதையும், ஆனால் அவர்கள் முயற்சித்த திட்டங்கள் தோல்வியடைய விருப்பதையும் குறிக்கிறது.

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சுனாமியில் இறந்துவிட்டது போல் கனவில் கண்டால், உங்கள் குடும்பத்தில் வரவிருக்கும் வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் பற்றியும், குடும்பத்தை ஏதாவது ஒரு வழியில் பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவிருப்பதையும், யார் இறந்தது போல் கனவில் காண்கிறர்களோ அவர்களைக் குறித்து நீங்கள் கவலைப்படவிருப்பதை பற்றிக் குறிக்கிறது.

நீங்கள் சுனாமியில் இறந்தது போல் கனவில் கண்டால், நீங்கள் ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும், ஆனாலும் அதுவே உங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தை வாழ்வில் கொடுக்க விருப்பதையும் குறிக்கிறது.

சுனாமி பற்றிய செய்தியோ, தொலைக்காட்சியலோ அறிவிப்பைப் பார்ப்பது போல் கனவில் கண்டால், நீங்கள் உங்களைச் சுற்றி நடக்கும் எதிர்மறையான, தவறான, கெட்ட தகவல்களை கண்டறிந்து, உண்மையான, நேர்மறையான விஷயங்களை மட்டும் மனதில் எடுத்துக் கொள்ள கனவு அறிவுறுத்துகிறது.

உங்கள் நகரத்தை சுனாமி அழித்து விட்டது போல் கனவில் கண்டால், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் முன் கவனமாக இருக்க கனவு அறிவுறுத்துகிறது. சுனாமி உடன் நிலநடுக்கத்தை உணர்வது போல் கனவில் கண்டால் வாழ்வில் வரவிருக்கும் சிக்கல்களை தீர்க்கும் வேகத்தைப் பொறுத்து நல்ல அல்லது கெட்ட முடிவுகளைப் பெற விருப்பதையும், எதிர்காலப் பிரச்சினைகளைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருக்கவும் கனவு அறிவுறுத்துகின்றது.

சுனாமியால் சாலைகள் மற்றும் பாலங்கள் அழிக்கப்படுவதை பார்ப்பது போல் கனவில் கண்டால் நீங்கள் ஏதோ உணர்ச்சிவசப் படவிருப்பதால் மனச் சோர்வு அடையவிருப்பதையும் உங்கள் அன்பிற்குரியவரின் உதவி வேண்டும் என நீங்கள் நினைக்கும் போது, அது உங்களுக்கு தாமதமாக கிடைக்கவிருப்பதையும் குறிக்கிறது.

இதுவரை சுனாமியை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை அறிந்திருப்பீர்கள்.

Leave a Comment