திருநங்கைகளை கண்டால் சிலர் பார்த்து சிரிப்பாங்க. திரு என்றால் மகாலஷ்மி. நங்கை என்றால் பெண். மகாலட்சுமியின் பெண். திருநங்கைகள் என்பதை முதல்ல புரிஞ்சுக்கோங்க.
திருநங்கைகள் உண்மையில் இந்த உலகில் வாழும் தேவதைகள். நீங்க வரம் வாங்குவதும், பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிப்பதும் அவங்க கையில தான் இருக்கு. திருநங்கைகளிடம் ஆசி பெற்றால் கண் திருஷ்டி காணாமல் போகும் என்றும், அவர்கள் கையால் பணம் வாங்கி பர்சில் வச்சா பணம் பெருகும் என்றும் பலரும் நம்புறாங்க.இது உண்மைதாங்க.
எனவே தான் ரயில்ல போகும் போதும் வெளியில திருநங்கைகள் பணம் கேட்கும் போதும் அவங்களுக்கு பணம் கொடுத்து ஆசி பெருறாங்க. குழந்தைகளுக்கும் ஆசி வழங்க சொல்றாங்க.
மகாபாரதத்தில் அரவான் களப்பலி கொடுத்து கிருஷ்ணர் பாண்டவர்களை வெற்றி பெற வைத்ததாக சொல்லப்படுது. இன்றைக்கும் அந்த தையின் நினைவாகதான் கூத்தாண்டவர் திருவிழா கொண்டாடப்படுது. யாராலும் செய்ய முடியாத சில விசயங்களை திருநங்கைகள் செய்ய முடியுங்க.
திருநங்கைகளிடம் பணம் கொடுத்து சில்லறை வாங்கி பாருங்க. அப்புறம் அதன் மகிமையை நீங்களே உணர்ந்துக்குவீங்க. ஜோதிடப்படி திருநங்கைகள் அப்படின்னா சனி, புதன் போன்ற கிரகங்களை குறிக்குதுங்க. அவங்களை நாம இழிவு படுத்தி பேசக்கூடாது.
அவங்களோட பிறவி அப்படி அமைந்ததற்கு அவங்களோட கர்மா தான் காரணம். அவங்க சிவசக்தியின் சொரூபங்க. திருநங்கைகளிடம் ஆசிர்வாதம் வாங்குங்க. உங்களோட வாழ்க்கையில வெற்றி நிச்சயம். வடநாட்டுக்காரங்க திருநங்கைகளை தெய்வமா மதிப்பாங்க. மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் பெரிய கடைகளை திறக்கும் போது முதன்முதலாக திருநங்கைகளுக்கு கொஞ்சம் பணத்தை அளிப்பதை முக்கிய அம்சமாக வச்சிருக்காங்க.
உங்களோட கனவில் திருநங்கைகள் வந்தால் எந்த மாதிரியான பலன்கள் உங்களுக்கு நடக்கும் அப்படின்னு பார்க்கலாம். திருநங்கைகள் உங்களோட கனவில் வந்தால், கவனிக்கப்படாத சில சிறிய பிரச்சனைகள் காரணமாக உங்களோட குடும்பம் ஆனது பெரிய நெருக்கடியில் சிக்கி இருப்பதை சொல்லுதுங்க. அதில் இருந்து நீங்க வெளியில வர்றதுக்கு ரொம்ப கவனமா சிந்திக்க வேண்டும் அப்படிங்கறதை இந்த கனவு குறிக்குதுங்க.
திருநங்கைகளை கனவில் கண்டால் நீங்க ஏதாவது ஒரு விஷயத்தில் முன்னேற விரும்புனா அதுல ரொம்பவே கடினமா உழைக்கணும். உங்களோட கடினமான உழைப்பு உங்களை மிக வேகமாக வெற்றி பெற வைக்கும். திருநங்கைகளை உங்களோட கனவில் காண்பது, நீங்க செய்யக்கூடிய செயல்களில் ஏதோ பிரச்சனைகள் ஏற்பட்டு அதனால் கெட்ட பெயர் உங்களுக்கு வரப்போகுது குறிக்கிடுங்க.
திருநங்கை உங்களோட கனவில் பிரசவம் பார்ப்பது போல கனவு வந்தால். உங்களுடைய குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
திருநங்கை உங்களை அடிப்பது போல கனவு வந்தால்
அப்படின்னா உங்களோட வாழ்க்கையில பல முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படப்போகுது அப்படின்னு அர்த்தம்.
திருநங்கைகள் உங்களை ஆசிர்வதிப்பது போல கனவு வந்தால். உங்களோட மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு தெளிவு பிறக்கும்.
திருநங்கைகள் உங்களோட வீட்டில் அமர்ந்திருப்பது போல கனவு வந்தால். நீங்க மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது சிந்தித்து செயல் படனும் அப்படின்னு சொல்லுதுங்க.
திருநங்கைகளை திருமணம் ஆனவங்க கனவுல பாத்தீங்கனா. உங்களோட குடும்பம் மற்றும் கணவன் மனைவிக்கிடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரித்து ரொம்ப சந்தோஷமா வாழ்வீங்க அப்படிங்கிறத குறிக்குதுங்க.
திருநங்கைகள் தெய்வத்திற்கு சமமானவங்க. திருநங்கைகளுடன் புகைப்படம் எடுத்துக்கோங்க. அவங்க உங்களை ஆசிர்வதிக்கும் புகைப்படத்தை அடிக்கடி பாருங்க.
திருநங்கைகள் உங்களோட கர்மவினையை குறைப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்கள் அப்படின்னு உணருங்க. திருநங்கைகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்வதற்கு காரணம் இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான, சக்திவாய்ந்த பரிகாரம் திருநங்கைகளுக்கு உதவி செய்யறதுதான்.
இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது அவங்களுக்கு தான் முதல்ல தெரியும். ஆனா வெளியில சொல்லமாட்டாங்க. உங்களால முடிஞ்சா அவங்கள கடவுளா கருதுங்க. அப்படி இல்ல. ஒரு உயிரா நினைங்க. இனி அடுத்த முறை திருநங்கைகளை பார்த்தீங்க. அப்படின்னா பழித்துப் பேசாமல் முகத்தை சுளிக்காமல் அவங்க கைநீட்டி காசு கேட்டா கொடுத்துப்பாருங்க.
நிச்சயம் உங்களோட வாழ்க்கையில நல்ல செயல்கள் உங்களுக்கு நடக்கும். உங்களோட வாழ்க்கைத் தரமும் உயரும். இதை பற்றிய உங்களோட கருத்துக்களை மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க.